திருப்பதியில் தேவஸ்தான ஊழியர்களிடம் சண்டையிட்ட நடிகை அர்ச்சனா..!
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை அர்ச்சனா கடந்த வியாழக்கிழமை சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்குச் சென்றார். அங்கு திருப்பதி மலையில் உள்ள கோயில் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தரிசன டிக்கெட் கொடுப்பது தொடர்பாக ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நடிகை அர்ச்சனா தேவஸ்தான ஊழியர் ஒருவரை தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





