--- --:--:-- --

இன்று தமிழகம் வருகிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி..!

9

ற்றுமை யாத்திரையை துவங்குவதற்காக இன்று தமிழகம் வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை ஏழாம் தேதி துவங்குகிறார்.

 

இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேருகிறார். விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவர் சென்னையில் தங்கி ராகுல்காந்தி புதன்கிழமை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

 

பின்னர் அங்கிருந்து ராகுல் காந்தி சென்னைக்கு திரும்பி வருகிறார். திருவனந்தபுரம் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon