--- --:--:-- --

செம்பரம்பாக்கம் ஏரி நீரில் மூழ்கிய இருவர்..!

2

செம்பரம்பாக்கம் ஏரி நீரில் மூழ்கி சிறார்கள் இறப்பதால் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக தெரிகிறது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் காரணமாக இந்த ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது.

 

கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை காண உள்ளூர் மக்களும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கல்லூரி மாணவர் ஒருவரும் பிளஸ்-2 மாணவர் ஒருவரும் அடுத்தடுத்த நாட்களில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளனர்.

 

ஏரியின் ஆழம் தெரியாமல் குளிக்கவும் கால் நினைக்கவும் இறங்கும் பொழுது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. எனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon