தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி படுகாயம்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவி படுகாயம் அடைந்தார். கோவில்பட்டியில் இயங்கிவரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.
வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர் திடீரென அவசரகால வழியில் இருந்து கீழே விழுந்தார். சகமாணவர்கள் கூச்சலை தொடர்ந்து உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




