வீட்டினுள் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வீட்டினுள் இருந்த கிணற்றில் இருந்து துணிகளால் மூட்டையாக கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துணிகளால் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
ரத்தனகிரி அருகே உள்ள பகுதியை சேர்ந்த தம்பதியினர் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி மனைவி சரிதா காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





