--- --:--:-- --

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

3

மிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் விதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வரும் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Right Menu Icon