காருக்குள் ஒரு வாரமாக இருந்த ராஜ நாகம் பிடிபட்டது..!
கேரளாவில் காருக்குள் ஒரு வாரம் இருந்த ராஜ நாகம் பிடிபட்டது. கேரளாவில் இருந்து சமீபத்தில் காரில் ஒருவர் சென்று வந்துள்ளார். அப்பொழுது சோதனைச்சாவடியில் காத்திருந்த பொழுது அவருடைய காரில் 10 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை.
சிலர் காரில் பாம்பு ஏறியதாக கூறி உள்ளனர். அப்போது சோதித்த பொழுது பாம்பை கண்டு பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு அதே காரில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று அவர் காரை எடுக்கு முயன்ற பொழுது காரில் பாம்பின் தோல் உரிந்து கிடப்பதை கண்டார். வனத்துறையினர் அவரது வீட்டின் சுற்றுச் சுவரில் இருந்த பாம்பை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





