மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!
விருதுநகரில் ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆட்டோ ஓட்டுனர் சண்முகம் அரசு மருத்துவமனையில் இருந்து ரயில்வே மேம்பாலத்தில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த காரை மற்றொரு கார் வலது பக்கமாக முன்னேறி வந்து ஆட்டோ மீது மோதி தடுப்பு சுவரோடு சேர்த்து இழுத்து சென்றது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், சண்முகமும் கார் ஓட்டுநரான முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் காயமுற்றனர். அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்து நேரிட்ட சிசிடிவி காட்சிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





