மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பாரதிராஜா..!
இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைப்படி அவர் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏசி சண்முகம் மேற்கொண்டார்.
இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சண்முகம் இன்று மருத்துவமனையில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.





