திருப்பூரில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..!
திருப்பூர் அருகே காட்டுப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பொங்குபாளையம் காட்டுப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இருக்கும் இடம் எந்த எல்லைக்குட்பட்டது என பெருமாநல்லூர் போலீசாரும் திருப்பூர் மாநகர போலீசாரும் பஞ்சாயத்து செய்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் வந்த பின்பு திருப்பூர் மாநகர போலீசாரின் பகுதிக்கு உட்பட்டது என தெரிய வந்துள்ளது.






