--- --:--:-- --

அரசு பேருந்து நடத்துனர் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!

1

அரசு பேருந்து நடத்துனர் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் பகுதிக்கு அரசு பேருந்தை ஸ்ரீநிவாஸன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

 

பேருந்து சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறிய நடத்துனர் ராஜேந்திரன் தவறிக் கீழே விழுந்துள்ளார்.

 

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அதே பேருந்திலேயே சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon