--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல் ஹாசன்..!

11

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிட்டது.

 

இந்த கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாபெரும் சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது.

 

ஆம், கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் 54வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். இதை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் 15ஆம் ஆண்டு விழாவில் கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உதயநிதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

இதன்முலம் உதயநிதி தொடர்ந்து நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இயக்குனர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பெருமகிழ்ச்சியுடன் பதிவாக வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon