புதுமண தம்பதியை வெட்டி கொன்ற தந்தை..!
காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையை வெட்டி கொன்ற கொடூர சம்பவம் எட்டயபுரத்தில் நிகழ்ந்துள்ளது. கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரேஷ்மா தனது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி உறவினரான மாணிக்கராஜ் என்ற கூலித் தொழிலாளியை மணந்துகொண்டார். சில நாட்கள் வெளியூரிலிருந்து அவர்கள் பின்னர் ஊர் திரும்பினார்.
ஆனால் ரேஷ்மாவின் தந்தை தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர் பஞ்சாயத்து பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த முத்துக்குட்டி அவரையும் கணவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தம்பதியினர் உடலை கைப்பற்றி கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.






