மனிதனின் கையை கடித்த குட்டி சுறா..!
ப்ளோரிடாவில் சுறா ஒரு மனிதனின் கையை கடித்து இழுத்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நாளில் சம்பர்லைன் பகுதியில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். படகில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவர்கள் வலையில் குட்டி சுறா மீன் சிக்கியுள்ளது. இதை கவனித்து படகில் இருந்தவர்கள் அந்த மீனை விடுவிக்க விரும்பினர். இதையடுத்து படகில் இருந்தவரின் வலை அந்த சுறாவின் வாயில் சிக்கியது. தூண்டிலை வெளியே எடுக்க தன் இரு கைகளை கொண்டு எடுக்க முயற்சி செய்தார்.
அந்த குட்டி சுறாவை விடுவிக்க முயன்ற போது ஒரு கட்டத்தில் அவரின் கையை கடித்து இழுத்தது சுறா. இதை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில வினாடிகள் கடித்துவிட்டு குட்டி சுறா வாயில் ரத்தம் கசிய கசிய அங்கிருந்து சென்றுது. பின் அவரை பத்திரமாக கரைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




