ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன்..!
ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துவதாக நடிகர் லால் தெரிவித்துள்ளார். தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பண நெருக்கடியால் அந்த விளம்பரத்தில் நடித்ததாகவும் இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சினை வரும் என்றும், ஒரு விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




