--- --:--:-- --

மதுரை அப்போலோ மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறை அறிமுகம்..!

0.1

மதுரை அப்போலோ மருத்துவமனையில் என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை மதுரை அப்போலோ மருத்துவமனை அடைந்துள்ளது.

 

மதுரை அப்போலோ மருத்துவமனையில் என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை மதுரை அப்போலோ மருத்துவமனை அடைந்துள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இப்புதிய சிகிச்சை முறையின் மூலம் பயன் பெற்றுள்ளனர். பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் வலி மற்றும் பின்விளைவுகளுக்கு தீர்வாக அமைகிறது இந்த சிகிச்சை முறை. பைபாஸ் அறுவை சிகிச்சையில் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த காலில் உள்ள ரத்த நாளத்தை (நரம்பு) கொண்டு இதயத்தில் பொருத்தப்படுகிறது.

பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேல் கோரோனரி ஆர்டரிகள் பைபாஸ் செய்யப்படுகிறது இதற்காக ரத்தநாளம் நரம்புகளில் இருந்து எடுக்கப்பட்டு இதயத்திற்கு ஏற்ற ரத்தக்குழாயாக மாற்றப்படுகிறது.
இந்த சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைவாக குணமடைவது மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் உண்டாகும் வலி மற்றும் பக்க விளைவுகள் குறைக்கப்படுகிறது.

 

உலகளவில் இப்பொழுது இருதய அறுவை சிகிச்சை ஒரு பாதுகாப்பான அறுவை சிகிச்சையாக மற்றும் 99% வெற்றிகரமான சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. கோரோனரி ஆர்டரி நோய்க்கு இதுவே சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது.

 

கடந்த 10 ஆண்டுகளாக பைபாஸ் அறுவை சிகிச்சையில் வெற்றி சதவீயாக தம் உயர்ந்து காணப்படுகிறது ஸ்டன்ட் பொருத்துதல் அல்லது மருந்துகளின் மூலம் குணப்படுத்துதலை விட பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் குணம் அடைந்தவர்களின் ஆயுள் அதிகமாகவே காணப்படுகிறது.

 

மதுரை அப்போலோ மருத்துவமனையில் கோரோனரி ஆர்டரி நோய்க்கான சிகிச்சை முறையில் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே சிறந்த முறையாக மேலோங்கி காணப்படுகிறது. இதுவரை 8000க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் 99% வெற்றி சதவீதத்துடன் செய்யப்பட்டுள்ளது.

 

அப்போலோ மருத்துவமனை இருதய சிகிச்சை பிரிவு எக்மோ மற்றும் ஐ ஏ பி பீ போன்ற அட்வான்ஸ் லைப் சப்போர்ட் டிவைஸ் பயன்படுத்தபடுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை என்றுமே ஒரு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

 

செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் வி. ஸ்ரீதர் – இருதய அறுவை சிகிச்சை நிபுணர், நீலக்கண்ணன் – முதன்மை இயக்க அலுவலர் – மதுரை மண்டலம், மணிகண்டன்- பொது மேலாளர், மார்கெட்டிங் பிரவீன்ராஜன்- இணை இயக்குநர் மருத்துவ சேவை, இவர்கள் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon