மருத்துவமனையில் இருந்து நேரில் சென்று வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்.நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலைத் தேர்வு செய்ய இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிப்பர்.
அதன்படி தமிழ்நாடு சட்டசபை அலுவலகத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தல் காலை தொடங்கி நடைபெறுகிறது. அதில் இன்று முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், நேரடியாகத் தலைமைச் செயலகம் சென்று அங்குக் குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்.





