அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை..!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என நாற்பத்தி ஒன்பது இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என நாற்பத்தி ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




