--- --:--:-- --

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்..!

2

டலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி சக மாணவரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று உள்ளார்.

 

அந்த மாணவியுடன் அவர் இருந்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டிய சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை தனியாக வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பிற மாணவர்களுக்கும் தெரியவந்ததால் பயந்து போன சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

 

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மாணவியுடன் புகைப்படத்தில் இருந்த மாணவன் உட்பட நான்கு மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அந்த மாணவியும் மாணவனும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon