--- --:--:-- --

இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த இளைஞர்..!

10

இளம் பெண்ணை ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அதே பெண்ணை திருமணம் செய்ததால் ஜாமின் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பட்டியை சேர்ந்த அஜித் என்ற இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

 

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அஜித் சத்யாவை கர்ப்பமாகியுள்ளார். சத்யாவிற்கு தற்போது மூன்று மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தன்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சத்யா தொடர்ந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.

 

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குழந்தையை பெற்றெடுத்த சத்யாவை இதே நீதிமன்ற வளாகத்திலேயே திருமணம் செய்து கொண்டால் தான் ஜாமீன் தருவேன் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 

இதனை தொடர்ந்து நீதிபதி நினைத்த இரண்டு வழக்கறிஞர்கள் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்று இருவரும் திருமண கோலத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon