தோசை சுடுவதற்கு புதிய மெஷின் ..!
தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டதால் யூட்யூப், இன்ஸ்டா போன்ற பலவிதமான ஆப்களை அனைவரும் அதிகப்படியான நேரத்தில் செலவு செய்து வருகிறோம். ஏனெனில் பல வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி காண்போரை கவர்ந்து வருகிறது.
அதுபோலவே ஒரு சீனப்பெண் மிக சரளமாக தமிழில் பேசுவது மட்டுமல்லாமல் தோசை சுடுவதற்காக ஒரு புதிய மெஷினை வாங்கியுள்ளார். அவருக்கு தோசை மிகவும் பிடிக்கும் என்பதாலும் இதனை சுட தெரியாது என்பதாலும் இவர் இந்திய மதிப்பில் ஆயிரத்து 700 ரூபாய் கொடுத்து இந்த தோசை சுட மெஷினை வாங்கியுள்ளார்.
இதில் அழகு என்னவென்றால் ஒரு தமிழ்ப் பெண் போலவே இவர் பொட்டுவைத்து சுடிதார் அணிந்து அந்த மிஷனை பற்றி அழகாக தமிழில் பேசுகிறார். இவர் பிரபல யூடியூபர் ஆவார்.






