--- --:--:-- --

தன் திருமணத்திற்கே செல்ல மறந்த MLA..!

5

னக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்எல்ஏவின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

அந்த மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் எம்எல்ஏவாக இருப்பவர் பிஜி. முன்னாள் அமைச்சரின் மகனான இவர் ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜூன் 17ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற முடிவாகி இருந்தது.

 

ஆனால் அன்றைய நாளில் மணப்பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் பலமுறை தொலைபேசியின் மூலம் எம்எல்ஏ தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் பதறிப்போன காதலி வீட்டார் காவல் நிலையத்தில் எம்எல்ஏ மீது புகார் அளித்து விட்டனர்.

 

காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரை தொடர்புகொண்டு விசாரணை செய்தது. அப்பொழுது எம்எல்ஏ கடந்த மே மாதமே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம்.

 

திருமணத்திற்கு இன்னும் அறுபது நாள் இருப்பதாக நினைத்து அசால்ட்டாக இருந்துவிட்டேன் இருப்பினும் எனது திருமணம் பற்றி யாரும் எனக்கு நினைவூட்ட வில்லை. அதனால் தான் திருமணத்திற்கு செல்ல மறந்து விட்டேன் என கூறியுள்ளார்.

 

Right Menu Icon