--- --:--:-- --

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு!

5

மிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி கணக்குப்படி 6 கோடியே 36 லட்சம் S.I..R. கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டது.

 

இதில் 5 கோடியே 18 லட்சம் வாக்காளர்களிடன் இருந்து கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 25 லட்சத்து 72 பேர் உயிரிழந்தவர்களாகவும், ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

குறிப்பாக சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதனிடையே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் பணிச் சுமையால் பாதிக்கப்பட்டால் அவர்களை விடுவித்துவிட்டு வேறு நபர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

Right Menu Icon