--- --:--:-- --

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் கைது..!

3

சிவகங்கை மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 21 வயது இளைஞர் அக்ரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல் மாடியில் நான்கரை வயது பெண்குழந்தை அவரது தாயுடன் வசித்து வருகிறார்.

 

அக்ரமின் நண்பர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த நிலையில் குழந்தையை காணவில்லை என அவரது தாய் தேடும்போது மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

 

அப்போது அக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அதன் பேரில் காவல் ஆய்வாளர் இளைஞர்களை அழைத்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் வாக்குமூலம் அளித்ததையடுத்து அப்துல் முகமது, நாகூர்கனி, யூசுப் அன்சாரி, சுலைமான், விஜயராகவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon