6% கூடுதல் மழை – வானிலை மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 396.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 419.3 மிமீ மழை பொழிந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 2% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





