டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு ..!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
அதன்படி சுமார் 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு 12,750 ரூபாயிலிருந்து 13 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விற்பனையாளர்களுக்கு 11 ஆயிரத்து 500 ரூபாயாகவும், உதவி விற்பனையாளர்களுக்கு 10,000 ரூபாயாகவும் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






