--- --:--:-- --

சிறுமி கழுத்தறுத்து கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை..!

6

சேலத்தில் தாயின் கண் முன்னே சிறுமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.

 

கடந்த 2018ல் 13 வயதான சிறுமி தினேஷ்குமாரிடம் பூக்கட்டும் நூல் கேட்டு சென்றுள்ளார். அப்பொழுது சிறுமியிடம் தவறாக பேசிய தினேஷ்குமார் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறவே கோபமடைந்த தினேஷ்குமார் அவர் தன் கண் முன்பாகவே சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் குற்றம் செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Right Menu Icon