--- --:--:-- --

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள்..!

2

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அந்த மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் பல்வேறு துறையின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 174 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சமூக கல்வியில் முதலிடம், நீடித்த வளர்ச்சியில் மூன்றாவது இடம், பணவீக்கத்தில் முதலிடம், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது, சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான 5 புதிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட்டார்.

Right Menu Icon