5 நாட்கள் பள்ளிகள் விடுமுறை..!
ஒடிசாவில் வெயில் காரணமாக கடுமையான அனல் காற்று வீசி வருவதால் பள்ளிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடை காலத்தில் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒடிசாவில் கோடை வெப்பமும் மக்களை வாட்டி வருகிறது.
இதனால் மக்கள் தோல் வியாதிகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒடிசாவில் புயல் காரணமாக கடுமையான அனல் காற்று வீசி வருவதால் பள்ளிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறும் எனவும், அதில் எந்த தடையும் இருக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.






