--- --:--:-- --

நித்யானந்தாவின் சீடர்கள் 3 பேர் உட்பட 5 பேர் கைது..!

5

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நித்தியின் சீடராக இருந்த வரை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் காரில் மீட்டு சென்று சம்பவத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் 3 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பட்டண முனியப்பன் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரின் மனைவி அத்தாய். இவர்களுக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளார். அத்தாய் கடந்த 5 ஆண்டுகளாக நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து வந்த நிலையில் பிரச்சினைக்காக கையெழுத்திட முனியப்பன் பாளையம் வந்துள்ளார்.

 

அப்பொழுது பொதுமக்களுக்கும் நித்தியின் சீடர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி போக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

 

அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் அத்தாயின் கணவர் ராமசாமி மற்றும் மகன் பழனிசாமி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon