ஊரடங்கால் வாட்ஸ் ஆப் பயன்பாடு 40 சதவீதம் அதிகரிப்பு
கொரொனாவால் கொரொனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வாட்ஸ்அப் பயனாளிகள் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. கொரொனா உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பொழுது போக்கிற்கு இணையத்தையே பெரிதும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வாட்ஸ்அப் இன் பயன்பாடு 40 விழுக்காடு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் வீடுகளில் இருப்பதால் சமூக வலைதளங்களில் மீதான நாட்டமும் அதிகரித்துள்ளது.18 முதல் 34 வயது வரை உள்ளவர்களை அதிகமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக்கின் பயன்பாடு 37 விழுக்காடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இன்றியமையாப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு பதிலளித்த முதலமைச்சர் பல்வேறு துறைகள் சார்பாக எடுக்கப்பட்ட கொரொனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தின் கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்து குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கேட்டறிந்தனர். கொரொனாவை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் காணொளி காட்சிகள் வாயிலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் கேட்டறிந்தனர்.
ராஜ் பவனில் இருந்து தமிழக ஆளுநர் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளித்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







