விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 சிறார்களிடம் விசாரணை..!
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விருதுநகரில் பட்டியலின இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், மாடசாமி. பிரவீன் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகியோரை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே நான்கு பள்ளி மாணவர்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களிடம் கூட்டாகவும் தனித்தனியாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






