300 ஆண்டுகள் பழமையான கோயிலை அகற்றி எதிர்ப்பு.. தேனியில் பரபரப்பு..!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோயில் அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள பேரூராட்சியில் அருந்ததிய மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பழமையான கோயிலை அகற்ற போவதாக நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
இதனையடுத்து பொதுமக்கள் போடி சாலையில் உள்ள கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தனிநபர் ஒருவரின் சுயநலத்திற்காக 300 ஆண்டுகளுக்கு மேலாக வழிபட்டு வரும் கோயிலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.






