சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்தில் 3 பேர் பலி..!
சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பத்மநாபன் என்பவரும் அவரது மனைவியும் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். படுகாயமடைந்த 12 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






