--- --:--:-- --

“ஒரு நாள் தொடரை தக்கவைக்க வெல்ல வேண்டிய கட்டாயம்” – மே.இ.தீவுகளை பழி தீர்க்குமா இந்தியா..?

171563

இந்தியா -மே.இ. தீவுகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டி தொடரில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவிய இந்தியா, இன்றைய போட்டியில் பழி தீர்த்தால் மட்டுமே தொடரை இழக்காமல் , வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

 

இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், சென்னையில் நடந்த முதலாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது மே.இ. தீவுகள் அணி .அந்த அணியின் ஹெட்மயர், சாய் ஹோப் ஆகியோர் அபாரமாக சதம் அடித்து வெற்றி தேடித் தந்தனர். இருவரின் அதிரடி முன் இந்தியப் பந்துவீச்சு எடுபடாததே தோல்விக்கு காரணமாகி விட்டது.

 

சமீப காலமாகவே, பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கில் மே.இ.தீவுகள் அணி எழுச்சி பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியிலும் சாதித்து, தொடரை வெல்ல முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, 1-1 என சமன் செய்து தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் கடும் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.இன்று போட்டி நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா 9 போட்டிகளில் பங்கேற்று 6-ல் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 3-ல் ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்த நிலையில் ஒரு போட்டி சமனிலும், மற்றொரு போட்டி மழையால் ரத்தானது. இந்த 3 போட்டிகளுமே மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon