அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்
அர்ஜூனா விருது வென்ற பாடிபில்டிங் வீரர் பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பாடிபில்டிங் வீரர் பாஸ்கரன் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
அர்ஜுனா விருது பெற்ற அவருக்கு ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாயும், அவரின் பயிற்சியாளருக்கு மூன்றே கால் லட்சமும் அமைக்க உரிய ஆணை வழங்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதற்கான ஆணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.






