மூன்று அசுரர்களை வதம் செய்த ஜெயந்திநாதர் – கடற்கரை மண்டபத்தில் சிறப்பு பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில், சுவாமி ஜெயந்திநாதர் அடுத்தடுத்து மூன்று அசுரர்களை வதம் செய்தார். முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார். பின்னர் சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து, தனது உண்மையான முகத்துடன் எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்து, அவனை சேவற்கொடியாகவும் மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார். தாரகாசுரன் அய்யனாரின் யானை வாகனமாகவும், சிங்கமுகாசுரன் உமையம்மையின் சிங்க வாகனமாகவும் மாற்றப்பட்டதாக ஐதீகம் கூறுகிறது. இவ்வாறு சூரசம்ஹாரத்தை நிறைவு செய்த ஜெயந்திநாதருக்கு திருச்செந்தூர் கடற்கரை மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




