சுந்தர் சி கமர்சியல் சினிமாவின் மாஸ்டர்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடந்து படத்தின் 2-+ம் பாகம் உருவாக்கும் பணியில், வேல்ஸ் நிறுவனம் ஈடுபட்டது.
முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய நிலையில், 2-ம் பாகத்தை இயக்க சுந்தர்.சி கமிட் ஆனார். வழக்கம்போல் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். ரெஜினி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
முதல் பாகம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான நிலையில், 2-ம் பாகம் தியேட்டரில் வெளியாகியுள்ளதால், படம் ரிலீஸ்க்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சூர்யாவின் சீன் திரைப்படமும் வெளியாகியுள்ளதால், முதல் முறையாக சூர்யா – நயன்தாரா நேரடியாக மோதியுள்ளனர்.
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ஒரு தீபாவளி விருந்து. குடும்ப செண்டிமெண்ட், அம்மன் காட்சிகள் எல்லாம் குடும்பங்களை கவர்ந்திழுக்கிறது. கமர்சியல் சினிமாவின் மாஸ்டர் சுந்தர் சி தான். அவரை போல பேமிலி ஆடியன்ஸை எப்படி கவரலாம் என்று சில இயக்குநர்களுக்கு மட்டுமே தெரியும். தசாப்தங்களாக திரையுலகில் 3 தசாப்தங்கள் ஆகியும், தலைமுறைகளைக் கடந்து அனைவரையும் ஈர்க்கும் முழுமையான பொழுதுபோக்குப் படங்களை வழங்கும் அவரது திறன் ஈடு இணையற்றதாகவே உள்ளது என்று எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
=
ட்விட்டர் பயனர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த காம்போ ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா? ஆமாம், நிச்சயமாக இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கக்கூடிய ஒரு நல்ல என்டர்டெய்னர்! சுந்தர் சி படங்களுக்கே உரிய காமெடி இதில் சற்று மிஸ்ஸிங் என்பது மட்டும் குறை. ஹிப்ஹாப் தமிழாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒட்டுமொத்த படத்தையும் நயன்தாரா தனது தோளில் சுமந்து செல்கிறார். வழக்கமான தனது பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சுந்தர் சி. 90s காலகட்டத்தில் நாம் ரசித்த அம்மன் படங்களின் நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் தருணங்கள் நிறைய! குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசிக்கக்கூடிய படம். இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று என்ஜாய் பண்ணுங்க! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஆரவாரமாக ரிலீஸானது. இப்படத்தை நடிகைகள் குஷ்பு, ரெஜினா ஆகியோர் சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்.மூக்குத்தி அம்மன் 2 90-களின் கிளாசிக் அம்மன் படங்களின் ஃபீல் (அம்மன், பாளையத்து அம்மன் பாணி). முழுமையான வணிக (Commercial) அம்சங்கள் நிறைந்தது! இந்த முறை சுந்தர் சி ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளார். அதிகமான பக்தி, சில நகைச்சுவைகள் மற்றும் கூடுதலான ஆக்சன் காட்சிகளை பிணைத்து “கடவுள் vs தீமை” கதையாக உருவாக்கியுள்ளார். பல காட்சிகளின் போது கிராமப்புற ரசிகர்கள் பரவச நிலைக்கு (God Mode) செல்வார்கள் என சுகுமார் சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





