ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மாண்டத் தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 14) காலை கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த ஆன்மிக வைபவத்தைக் காணத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்கள் அனைவரும் “கோவிந்தா… கோபாலா…” என்ற பக்தி முழக்கத்துடன் உற்சாகத்துடனும் அரவாரம் செய்தவாறும் தேரின் வடத்தைப் பிடித்து மாட வீதிகள் வழியாக இழுத்து வருகின்றனர்.
விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்தர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




