--- --:--:-- --

ஏ.ஆர். ரகுமான் மகன் சென்ற சொகுசு கார் விபத்து..!

01

ட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சென்னையில் நடைபெற்ற ‘மீசைய முறுக்கு 2’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. சென்னை பீனிக்ஸ் மாலில் நேற்று மாலை “மீசைய முறுக்கு-2” படத்தின் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவிருந்தது.

 

இதில் பங்கேற்க ரசிகர்கள் திரண்டதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று ‘மீசைய முறுக்கு-2’ கொண்டாட்ட நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. போலீசார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று ரசிகர்கள் கலைந்து சென்றனர். இதனை அடுத்து, ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். உங்களை காண்பதற்கு ஆவலாக பீனிக்ஸ் மாலில் காத்திருந்தேன். தவிர்க்க முடியாத பாதுகாப்பு காரணங்கள் கருதி, காவல்துறையினர் நிகழ்ச்சியை ரத்து செய்ய சொல்லி அறிவுறுத்தினர்.

 

 

கட்டுக்கடங்காத கூட்டம், போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மிகவும் ஆவலாக காத்திருந்தேன்.ஆனால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், காவல்துறை அங்கிருந்து கிளம்ப சொன்னார்கள். அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மன வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பிட்டேன்.நிகழ்ச்சிக்காக வந்து காத்திருந்தவர்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் பாதுகாப்புக்காகவும், அனைவரின் பாதுகாப்புக்காகவும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon