நீட் எதிர்ப்புப் பயணத்திற்குத் தடை: த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்
அறவழியில் நடக்கவிருந்த நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தைத் தடை செய்த தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது சமூக விரோதச் செயல் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள அவர், தந்தை பெரியாரைத் தனது ஆட்சியின் கொள்கை அடையாளமாக அறிவித்துவிட்டு, ‘நீட் வேண்டாம்’ என்ற சொந்த நிலைப்பாட்டிற்கு மாறாகத் தவெக அரசு நடந்துகொள்வது மக்களின் அதிருப்தியையே சம்பாதிக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், தடையை மீறி இந்தப் பயணத்தை நடத்த முடியும் என்றாலும், முதற்கட்டமாக இதனைச் சட்ட ரீதியாக அணுகவுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




