--- --:--:-- --

கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு -மாணவர்கள் போராட்டம் வாபஸ்

5

மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து சிஜேபின் பிற கோரிக்கைகளையும் ஏற்றது மத்திய அரசு. பேச்சுவார்த்தைக்குப் பின் மத்திய மந்திரிகள் சிஜேபியினர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

 

 

அதில்3ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாக உறுதி அளித்ததால் நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசுடன் 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. 4 வாரங்களில் மத்திய அரசுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா கூறுகையில், “நாங்கள் அரசாங்கக் குழுவினருடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பல நாட்களாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த எங்கள் போராட்டத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்,போராட்டக்காரர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும், மேலும் போராட்டக்காரர்கள் அல்லது அமைப்பாளர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படக்கூடாது.

 

 

எங்கள் மூன்றாவது கோரிக்கை, நீட் தேர்வு நடத்தப்படாததால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு NE வழங்குவது. சற்று முன்புதான் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதன் மூலம் எங்கள் முதல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon