--- --:--:-- --

இது தான் அரசியல் மாண்பா? – தி.மு.க மகளிர் அணி கேள்வி

5

தி.மு.க மகளிர் அணி அதன் சமூக வலைதள பக்கத்தில், “குறிப்பிட்ட நேரத்திற்கு வருவது தவெக அகராதியில் இல்லை போல. த.வெ.க தலைவர் எவ்வழியோ த.வெ.க அமைச்சர்களும் அவ்வழியே. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காட்டலங்குளத்தில் இன்று நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான அக்கா கனிமொழி எம்.பி.யை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

 

 

குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றும் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் , காரில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்தே சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். த.வெ.க அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே கனிமொழி கருணாநிதி மரியாதை செலுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிப்பது தவெக அரசின் அடக்குமுறையை காட்டுகிறது.

 

 

இந்த சலசப்புக்கு அஞ்சாத அக்கா திருமிகு கனிமொழி கருணாநிதி எம்பி , நான் நடந்தே செல்கிறேன் என்று கூறி நடந்து சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.” என்று கூறியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon