உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பாடப்புத்தகங்கள்: ரூ.1.93 கோடி நிதி ஒதுக்கித் தமிழக கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்காக 2.68 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு ரூ.1.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக கல்வித்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான செலவினங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிதியிலிருந்து மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 58,985 பள்ளிகளுக்கு உடற்கல்வி நூல்கள் அச்சிடப்படவுள்ளதாகவும், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக இந்த நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் (வழிகளிலும்) பிரத்யேகமாக அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் கல்வித்துறை தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




