--- --:--:-- --

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

02

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இது 2 நாட்களில் மேலும் வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று குறைந்து காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon