மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று ( ஜூன் 11) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,500க்கும் சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி இன்று ( ஜூன் 12) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,800க்கும் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




