கவின் ஆணவக் கொலை வழக்கு: கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன்
நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு, கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலை வழக்கில் ஏற்கனவே சுஜித் மற்றும் அவரது பெற்றோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




