தேர்வு முறைகேடு கண்டித்து மாணவர் அமைப்பினர் கைது..!
சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை நேற்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுகளில் முறைகேடு மற்றும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகக் கூறி அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” எனும் பெயரில் எடுத்த பேனர்களையும் ஏந்தியபடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்பானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




