--- --:--:-- --

தலைமைச் செயலகத்திற்கு அருகே ரசாயன புகை..!

7

சென்னை தலைமைச் செயலகம் அருகே துறைமுகப் பகுதியில் இருந்து ரசாயனப் புகை வெளியேறியதால், பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் 10வது நுழைவு வாயில் அருகே திடீரென்று புகை கிளம்பியது. புகையின் வீரயம் அதிகரிக்கத் தொடங்கியதும், அது ரசாயன வாயுவாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது. மேலும், கண் எரிச்சல், மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் கைகுட்டை மற்றும் மாஸ்க் அணிந்துக் கொண்டனர்.

 

 

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், துறைமுகத்தில் இருந்து சல்ஃபர் வாயு கசிந்ததை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில், துறைமுகத்துக்குச் சென்று புகையை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டினர்.

 

இந்நிலையில் அதிக வெப்பத்தால் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட சல்ஃபர் வேதிமாற்றம் அடைந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி சத்திய நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon