எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயபாஸ்கர்
அ.தி.மு.க கொறடா பிறப்பித்த உத்தரவை மீறிச் செயல்பட்டதாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ விஜயபாஸ்கர் மனு அளித்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் சட்ட விதிகளையும் கொறடாவின் உத்தரவையும் வேண்டுமென்றே மீறிச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் மீதும் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமைச் செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




